Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதானி நிறுவனத்திற்கு 8 கோடி சதுர அடி நிலம் வழங்கிய அரசு: நீதிமன்றம் கண்டனம்..!

Advertiesment
அசாம்

Mahendran

, செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (10:12 IST)
அசாம் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தினருக்கு சொந்தமான சுமார் 8.10 கோடி சதுர அடி நிலத்தை மகாபால் சிமெண்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கிய அசாம் அரசின் முடிவுக்கு கவுஹாத்தி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலம் தரிசு நிலம் என்றும், சிமெண்ட் ஆலைக்கு அது அவசியம் என்றும் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.
 
இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் மேதி, " 8.10 கோடி சதுர அடி நிலம் என்பது ஒரு முழு மாவட்டத்திற்கு சமம். ஒரு தனியார் நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய நிலப்பரப்பு ஒதுக்கப்படுகிறதா? தரிசு நிலமாக இருந்தாலும், இவ்வளவு பெரிய பரப்பளவை எப்படி ஒரு நிறுவனத்திற்கு வழங்க முடியும்? இது என்ன மாதிரியான முடிவு?  என்று கேள்விகளை எழுப்பினார். 
 
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. மகாபால் சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கும் தங்களது குழுமத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒவ்வொரு தொகுதியிலும் உங்கள் திருட்டை கண்டுபிடிப்பேன்! - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல்காந்தி சவால்!