24 மணி நேரத்தில் 6,654; மொத்தம் 1,25,101: மோசமாகும் இந்தியாவின் நிலை!

சனி, 23 மே 2020 (10:01 IST)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,101 ஆக உயர்ந்துள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைந்து நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,447லிருந்து 1,25,101 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 48,534லிருந்து 51,784 ஆக உயர்வு. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,583லிருந்து 3,720 ஆக உயர்வு. 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 12,583 ஆக உயர்வு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,517ஆக உயர்வு. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு!