எல்லை பிரச்சனை.. ரஜினி, கமல் பட நடிகைக்கு எதிர்ப்பு ...

வெள்ளி, 22 மே 2020 (19:07 IST)
இந்தியன் படத்தில் கமல்ஹசனுடனும், பாபா படத்தில் ரஜினியுடனும் நடித்த ர்நடிகை மனிஷா கொய்ராலா எல்லை பிரச்சனையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக அவகுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நேற்று முன் தினம் நேபாள அரசு ஒரு புதிய வரைபடம் வெளியிட்டது. அதில் இந்தியாவ் இன் உத்ராகாண் மாநிலத்துக்கு உட்பட்ட காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளை நேபாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு கடும் கண்டனங்களை தெரிவித்தது.

இந்த நிலையில்,நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு நடிகை மனிஷா கொய்ராலா ஆதரவு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நேபாள அரசின் புதிய வரைபடத்தை வரைந்துள்ளார். அதில் ‘ நமது சிறிய நாட்டின் கவுரவத்தை காத்ததற்கு நன்றி ‘ என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் மனிஷாவுக்கு எதிரகக இந்தியாவில் எதிர்ப்புகளும் கண்ட பதிவுகளும் அதிகரித்து வருகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சூப்பர் ஸ்டார் வீட்டில் சினிமா நட்சத்திரங்கள் ஆலோசனை !