சென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு!

சனி, 23 மே 2020 (09:21 IST)
சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சலூன், அழகு நிலையங்கள் திறக்க அனுமதி. 
 
தமிழகத்தில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சலூன் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.  
 
இதனால் முடிதிருத்தும் தொழிலை நம்பி இருக்கும் 5 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். எனவே இவர்கள் முதல்வர்களுக்கு கடையை திறக்க அனுமதிக்கும் படி கோரிக்கை வைத்தனர்.  
 
எனவே, முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.  
மேலும், சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதியில்லை. சென்னை, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சலூன் கடைகளை திறக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தனர். 
 
ஆனால் இப்போது சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நகர் பகுதிகளிலும் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் திமுக எம்.எல்.ஏக்கள், வக்கீல்கள் வாக்குவாதம்: சர்ச்சையாகும் கைது!