உத்தரப் பிரதேச மாநிலத்தில், மாமியார் தொல்லை தாங்க முடியாமல் ஒரு காவலரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌம்யா காஷ்யப் என்ற அந்த பெண், மரணத்திற்கு முன் பதிவு செய்த உருக்கமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், சௌம்யா காஷ்யப் அழுதுகொண்டே தெரிவித்திருப்பதாவது:
தனது மாமியார், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் மறுமணம் செய்து வைக்க முயற்சித்தார். மாமியார் தரப்பு வழக்கறிஞர் ஒருவர், தனது கணவனை விட்டுக்கொடுக்குமாறு மிரட்டியதாகவும், அப்படி செய்யாவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதாகவும் சௌம்யா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சௌம்யாவின் வீடியோ வாக்குமூலத்தின் அடிப்படையில், தற்கொலை செய்து கொண்ட காவலரின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுவதால், இந்த வழக்கில் மேலும் பரபரப்பு நிலவுகிறது.