Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீகார் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி!.. 4 இடங்களில் மட்டுமே முன்னிலை...

Advertiesment
bihar election 2025

Bala

, வெள்ளி, 14 நவம்பர் 2025 (12:47 IST)
பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. துவக்கம் முதலே பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
 
காங்கிரசும் தேஜஸ்வி யாதவ், இடதுசாரிகள் உள்ளிட சில கட்சிகள் இணைந்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 45 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறார்கள். துவக்கத்தில் இந்தியா கூட்டணி நிறைய தொகுதிகளில் முன்னிலையில் இருந்தாலும் போகப்போக பின்தங்கியது.
 
அதிலும் காங்கிரஸ் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கிறது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் தனியாக 61 தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த தேர்தலில் 19 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தற்போது 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல், தேஜஸ் யாதவின் RJD கட்சி 32 இடங்களிலும், இடதுசாரிகள் 8 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறார்கள்.
 
காங்கிரஸின் படுதோல்வியாக இது பார்க்கப்படுகிறது. 193 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி முன்னணியில் இருப்பதால் பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் அமைப்பது உறுதியாகியிருக்கிறது. பீகாரில் மீண்டும் முதல்வராக நிதீஷ் குமாரை தேர்ந்தெடுக்கப்படுவார் என பலரும் சொல்லி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் திருச்சிக்கு மாற்றம்!