Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“சீறினாள் சின்மயி, கொதித்தாள் சின்மயி”.. நீங்க நினைச்சபடியே டைட்டில் போட்டுட்டிங்க: சின்மயி ஆதங்கம்..!

Advertiesment
சின்மயி

Siva

, திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (08:23 IST)
பாடகி சின்மயி நேற்று காலை ஒரு மருத்துவமனையில் மார்பக பராமரிப்பு மையத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்களின் அனுபவங்களையும், பெண்கள் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் அவசியம் பற்றியும் அவர் பேசினார். மேலும், பார்வையாளர்களுக்காக பாடல்களும் பாடினார்.
 
ஆனால், இந்த முக்கியமான நிகழ்வில், ஒரு பெண் பத்திரிகையாளர் சின்மயியிடம் அவரது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான அனுபவம் பற்றியும், அந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் கண்ணோட்டம் குறித்தும் கேள்வி எழுப்பினார். இது சின்மயியை அதிருப்திக்கு உள்ளாக்கியது. இந்த நிகழ்வில் அவர் பேசிய முக்கிய கருத்துகளை விடுத்து, பத்திரிகையாளர் கேட்ட தனிப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில், செய்தியின் முக்கிய தலைப்பாக மாற்றப்பட்டது.
 
இந்த வீடியோவின் முடிவில், தனது கருத்தை பரபரப்பாக்கவே செய்தி நிறுவனங்கள் முயற்சிக்கும் என்று சின்மயி தெரிவித்திருந்தார். அதன்படி, “சீறினால் சின்மயி, கொதித்தால் சின்மயி” போன்ற தலைப்புகளில் அந்த துணுக்கு செய்தி வெளியிடப்பட்டது. சமூக விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்வின் முக்கியத்துவத்தை உணராமல், தனிப்பட்ட சர்ச்சைக்கு முன்னுரிமை அளித்த ஊடக அணுகுமுறை குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு.. போட்டியாளர்கள் யார்? ஷிவாங்கி தொகுப்பாளரா?