தெரு நாய்கள் தொல்லை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகத்தை ஒரு நாடகக் கலைஞர் நிகழ்த்திய நிலையில், அந்த நாடகத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே தெரு நாய் அவரைக் கடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் உள்ள ராதாகிருஷ்ணன் என்ற 57 வயது நாடக நடிகர் ஒருவர், தெரு நாய்கள் தொல்லை குறித்த விழிப்புணர்வு நாடகத்தை அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு தெரு நாய் பாய்ந்து வந்து அவரைக் கடித்துவிட்டு ஓடிவிட்டது.
இதைப் பார்த்த மக்கள், இது ஒரு நாடகத்தின் ஒரு பகுதி என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், நாடகம் முடிந்த பிறகு, தன்னை உண்மையான நாய் கடித்து விட்டது என்று ராதாகிருஷ்ணன் அங்கிருந்தவர்களிடம் கூறிய நிலையில், உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தெரு நாய்கள் தொல்லை குறித்த விழிப்புணர்வு நாடகம் நடந்து கொண்டிருக்கும்போதே நாடக நடிகரைத் தெரு நாய் கடித்த இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.