Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

Advertiesment
சிறுபான்மையினர்

Mahendran

, வெள்ளி, 14 நவம்பர் 2025 (14:27 IST)
பிகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், வழக்கமாக எதிர்க்கட்சிகளின் கோட்டையாக இருக்கும் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் உள்ள தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
 
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், சுமார் 16 சிறுபான்மையினர் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் NDA வேட்பாளர்கள் தற்போது முன்னிலையில் உள்ளனர். குறிப்பாக, நிதிஷ் குமாரின் ஜனதா தளம் கட்சி கடந்த 2020 தேர்தலை காட்டிலும் கூடுதலாக 8 தொகுதிகளில் இத்தகைய பகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
 
மறுபுறம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 2020-ல் வென்ற 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. வரலாற்று ரீதியாக 77% வரை மகா கூட்டணிக்கு சாதகமாக இருந்த முஸ்லிம் வாக்குகள், இந்த முறை NDA பக்கம் திரும்புவது அல்லது பிரிந்து செல்வது, பிகார் தேர்தல் முடிவுகளின் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை