ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் இன்று காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதை அடுத்து, இன்று முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சபரிமலை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் தினமும் ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்து தங்கள் தரிசன தேதி மற்றும் நேரத்தை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், சிறப்பு ரயிலும் ஏற்பாடு செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.