Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டி ரூ.11 லட்சம் மோசடி.. விரக்தியில் ஐடி ஊழியர் தற்கொலை..!

Advertiesment
கர்நாடகா

Siva

, புதன், 16 ஜூலை 2025 (11:38 IST)
டிஜிட்டல் அரெஸ்ட் என்று மிரட்டப்பட்டு, மோசடி நபர் ஒருவர் ஐடி ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த நிலையில், அந்த ஊழியர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெஸ்காம்  என்ற நிறுவனத்தில் பணி செய்து வரும் குமார் என்ற 42 வயது நபரை, சமீபத்தில் விக்ரம் கோஸ்வாமி என்றவர் தொடர்பு கொண்டார். அவர் தன்னை மத்திய புலனாய்வுப் பிரிவின்  அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு, குமாரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாகவும், அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்றால், தான் கூறிய கணக்குகளில் பணத்தை பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றும் கூறிய நிலையில், குமார் பயந்து ரூ.11 லட்சம் வரை பணத்தை அனுப்பி உள்ளார். அதன் பிறகு,  விரக்தியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை அவர் தனது மரணக் குறிப்பில் எழுதி வைத்துள்ளார். 
 
இதனை அடுத்து, போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும், அவரை மிரட்டி பணம் பறித்த நபர் யார் என்பதைக் குறித்து கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்ஜிஆர் பெயரில் புதிய கட்சி!? விஜய்யுடன் கூட்டணி? - ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.0!?