Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

Advertiesment
கர்நாடகா

Mahendran

, செவ்வாய், 15 ஜூலை 2025 (10:27 IST)
கர்நாடக மாநிலத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அதிர்ச்சியில், தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில், 58 வயதான ரஜிதா ரெட்டி என்ற பெண் தனது கணவர் மற்றும் மகள் ஸ்ரீஜா ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த் நிலையில் ரஜிதாவின் மகள் ஸ்ரீஜா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமையல் செய்துவிட்டு படுக்கையறைக்கு சென்ற ரஜிதா மகள் தூக்கில் தொங்குவதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
 
உடனே கணவரை தொடர்புகொண்டு, "நம் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுவிட்டாள். அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. நானும் தற்கொலை செய்யப் போகிறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இந்த நிலையில், அவசர அவசரமாக ரஜிதா ரெட்டியின் கணவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தாய்-மகள் இருவருமே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாய்-மகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீஜா எதற்காக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் தெரியவில்லை என்பதால், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!