பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீர், இந்த மாதம் மீண்டும் அமெரிக்காவிற்கு செல்ல இருக்கிறார். இரண்டு மாதங்களுக்குள் இது அவரது இரண்டாவது அமெரிக்க பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட குரில்லா, இந்த மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளார். இதுகுறித்த விழாவில் கலந்து கொள்ளவே அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா செல்லவுள்ளார்.
இந்த நிகழ்வுகள், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே வளர்ந்து வரும் இராணுவ உறவுகளை தெளிவாக காட்டுகின்றன. கடந்த ஜூன் மாதம், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு சில வாரங்களுக்குப் பிறகு, அசிம் முனீர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தனிப்பட்ட முறையில் மதிய உணவு சந்திப்பை நடத்தினார்.
இந்த சந்திப்புகள் இந்தியாவை வெறுப்பேற்றவே நடைபெறுவதாக கூறப்படுகிறது.