Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசிஎஸ் நிறுவனத்திற்கு வெறும் 99 பைசாவுக்கு நிலம் கொடுக்கும் ஆந்திர அரசு.. சந்திரபாபு நாயுடு ஒப்புதல்..!

Advertiesment
Chandra Babu Naidu

Mahendran

, புதன், 16 ஏப்ரல் 2025 (12:44 IST)
விசாகப்பட்டினத்தை துறைமுக நகரமாக இருந்து தகவல்தொழில்நுட்ப நகரமாக மாற்றுவதற்கான முதல் படியாக, ஆந்திர அரசு 21.16 ஏக்கர் நிலத்தை 99 பைசாவுக்கு டிசிஎஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதற்கு முன், ஆந்திர அரசு அதிகாரிகளும், டிசிஎஸ் நிறுவன அதிகாரிகளும் இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த நிலையில், அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
 
மேலும், 90 நாட்களுக்குள் டிசிஎஸ் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் தனது பணிகளை தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக, நிறுவனம் வாடகைக் கட்டடத்தில் ஆரம்பிக்கும் என்றும், விரைவில் புதிய கட்டிடங்களைத் தொடங்கி, 10,000 ஊழியர்கள் தங்க வசதிகளுடன் அனைத்து தேவையான ஏற்பாடுகளும் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த கட்டுமானப் பணிகள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்க வாய்ப்பு உள்ளது.
 
விசாகப்பட்டினத்தில் டிசிஎஸ் நிறுவனம் தொடங்கியவுடன், அங்கு பிற தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கும், தகவல்தொழில்நுட்ப நகராக மாற்றும் அடித்தளம் அமைக்கப்படுவதற்கும் வழி வகுக்கும். எதிர்காலத்தில், ஆந்திர அரசு 5 ஆண்டுகளுக்குள் சுமார் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? நிப்டி, சென்செக்ஸ் அப்டேட்..!