சந்திரபாபு நாயுடு ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முதல்வராக இருந்தபோது பில்கேட்ஸ் உடன் சந்திப்பு நடத்தி ஆந்திராவுக்கு பல ஐடி நிறுவனங்களை கொண்டு வந்தார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது சுவிட்சர்லாந்தில் நடைபெறும் முதலீட்டு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அதே மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பில்கேட்ஸ் அவர்களை சந்தித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்களை முதல்வர் மீண்டும் சந்தித்திருப்பது, ஆந்திர மாநிலத்திற்கு மிகப்பெரிய முதலீடு இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரா தலைநகர் அமராவதியில் ஏஐ மையம் நிறுவுவதற்கு பில்கேட்ஸ் உடன் அவர் ஆலோசனை செய்ததாகவும், ஏஐ சம்பந்தமான முதலீடுகளை ஈர்ப்பதில் அவர் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கூகுள் கிளவுட், பெப்சி, உள்ளிட்ட சில நிறுவனங்களின் தலைவர்களையும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்புகள் ஆந்திராவுக்கு மிகப்பெரிய முதலீட்டை கொண்டு வரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.