நேற்று பங்குச்சந்தை உச்சத்துக்கு சென்றது என்பதும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 1500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் பெற்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், நேற்று பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்ற நிலையில் இன்று பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி பங்குச்சந்தை வர்த்தகம் ஆகி வருகிறது.
குறிப்பாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 28 புள்ளிகள் மட்டும் குறைந்து 76,074 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி வெறும் 7 புள்ளிகள் மட்டும் குறைந்து 23,321 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கல்யாண ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி, மணப்புரம், ஸ்டேட் வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, எஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வருகின்றன.
அதேபோல், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், HCL டெக்னாலஜி, HDFC வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், ICICI வங்கி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.