Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் வசதி.. புறப்படும் நேரம் என்ன?

Advertiesment
tirupathi

Mahendran

, வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (11:08 IST)
திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடியாக பஸ் வசதி இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இந்த சேவையை அவரே தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த பிப்ரவரி மாதம் பழனிக்கு யாத்திரை சென்றபோதுதான் பக்தர்கள் திருப்பதிக்கு நேரடி பஸ் வசதி இல்லை என்ற செய்தியை எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர் என்றும், இதனை அடுத்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தற்போது இந்த பஸ் வசதி அறிமுகம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து, இரண்டு ஆன்மீக தலங்களுக்கு இடையே பஸ் வசதி தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
திருப்பதியில் இருந்து தினமும் இரவு எட்டு மணிக்கு புறப்படும் இந்த பேருந்து, மறுநாள் காலை ஏழு மணிக்கு பழனியை சென்றடையும். 55 கிலோமீட்டர் தூரத்தை 11 மணி நேரத்தில் கடக்கும். அதேபோல், பழனியில் இருந்து இரவு எட்டு மணிக்கு புறப்படும் பேருந்து, மறுநாள் காலை 7 மணிக்கு திருப்பதியை வந்தடையும்.
 
இந்த பேருந்தில் பயணம் செய்ய பெரியோர்களுக்கு ₹680, சிறியவர்களுக்கு ₹380 என  கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பேருந்து சேவை காரணமாக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை.. இனியும் தாமதம் கூடாது: அன்புமணி