Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

Advertiesment
அல்-கொய்தா

Siva

, புதன், 30 ஜூலை 2025 (12:28 IST)
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாத குழுவின் முக்கிய சதிகாரரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது செய்துள்ளது. 30 வயதான ஷமா பர்வீன் என்ற அந்தப் பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
 
விசாரணையி9ல் பர்வீன் இந்த முழு பயங்கரவாத குழுவையும் இயக்கி வந்ததாகவும், கர்நாடகாவில் இருந்து நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தவர் இவர்தான் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் குஜராத் ஏடிஎஸ் படையால் கைது செய்யப்பட்ட நான்கு அல்-கொய்தா பயங்கரவாதிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பர்வீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறுகையில், நேற்று பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பெண் மிகவும் தீவிரமயமாக்கப்பட்டவர் என்றும், ஒரு ஆன்லைன் பயங்கரவாத குழுவை நடத்தி வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவருக்குப் பாகிஸ்தானிய தொடர்புகள் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
முன்னதாக ஜூலை 23 அன்று, குஜராத் ஏடிஎஸ் அல்-கொய்தா பயங்கரவாத குழுவை சேர்ந்த நான்கு பயங்கரவாதிகளை கைது செய்தது. பயங்கரவாதிகளில் ஒருவர் டெல்லியிலும், ஒருவர் நொய்டாவிலும், இருவர் குஜராத்தின் அகமதாபாத் மற்றும் மோடாசாவிலும் கைது செய்யப்பட்டனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!