பிலாவல் புட்டோ ஒரு நம்பகத்தன்மையானவர் அல்ல; அவர் ஒரு உண்மையான முஸ்லிம் அல்ல" என்று பாகிஸ்தானில் உள்ள ஒரு பயங்கரவாதியின் மகன் பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத், மசூத் அசார் ஆகியோர்களை நாடுகடத்துவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என பிலாவல் புட்டோ சமீபத்தில் கூறியதற்கு, ஹபீஸ் சயீத் மகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "பிலாவல் பூட்டோ வெளியுறவு கொள்கையில் ஒரு நம்பகமான ஆள் அல்ல. அவர் ஒரு உண்மையான முஸ்லிம் அல்ல. என் தந்தையை நாடுகடத்தலாம் என எப்படி அவர் கூறலாம்? உங்கள் அரசியலை எங்களிடம் காட்ட வேண்டாம். எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் எதிரியிடம் ஒப்படைப்பதாக அவர் எப்படி கூறலாம்?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தேவைப்பட்டால், லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் நாடுகடத்தப்படுவார் என்று பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி சமீபத்தில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.