Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Breaking: அகமதாபாத் விமான விபத்து! முதலமைச்சருக்கு போன் செய்த அமித்ஷா! ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!

Advertiesment
Plane Crash

Prasanth K

, வியாழன், 12 ஜூன் 2025 (14:58 IST)

அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏர் இந்தியாவின் AI-171 விமானம் 200க்கும் மேற்பட்ட பயணிகளோடு லண்டனுக்கு புறப்பட்ட விமானம் அகமதாபாத் விமான நிலையம் அருகே மேகனிநகரில் விழுந்து விபத்திற்கு உள்ளானது. தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

 

இந்நிலையில் விமான விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம் “அகமதாபாத்-லண்டன் கேட்விக் இடையே இயக்கும் AI171 விமானம் இன்று, ஜூன் 12, 2025 அன்று ஒரு சம்பவத்தில் சிக்கியது. இந்த நேரத்தில், நாங்கள் விவரங்களை உறுதிசெய்து வருகிறோம், மேலும் கூடுதல் புதுப்பிப்புகளை http://airindia.com மற்றும் எங்கள் X ஹேண்டில் (https://x.com/airindia) இல் விரைவில் பகிர்ந்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளது.

 

இந்த விமான விபத்து தகவல் குறித்து உடனடியாக குஜராத் மாநில முதலமைச்சருக்கும், போலீஸ் கமிஷனருக்கும் போன் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக நம்பிக்கை அளித்துள்ளார். 

 

விபத்து நடந்த இடத்திற்கு எல்லை பாதுகாப்பு படை (BSF), தேசிய பாதுகாப்பு படை (NSG) உடனடியாக விரைந்துள்ளன. இந்த விமான விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், விமானத்தில் பயணித்தவர்களுக்காக பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று மாலை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!