Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

Advertiesment
திமுக

Siva

, திங்கள், 9 ஜூன் 2025 (08:27 IST)
திமுக கூட்டணியை வீழ்த்த, அதிமுக - பாஜக கூட்டணி மட்டும் போதாது என்றும், தேமுதிக, பாமக போன்ற கட்சிகளையும், குறிப்பாக விஜய் கட்சியையும் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என்றும், தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு மதுரை வந்த அமித்ஷா முக்கிய டாஸ்க் கொடுத்துள்ளதாகவும், அதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
2026 தேர்தலுக்கு திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி தயாராகி வருகிறது. சீமான் ஒரு பக்கம் தனித்துப் போட்டு இட போவதாக அறிவித்துள்ளார். விஜய் தனித்து போட்டி விடுவாரா, அல்லது ஒரு புதிய கூட்டணி அமைப்பாரா, அல்லது திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் சேருவாரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
 
இருப்பினும், அதிமுக - பாஜக கூட்டணிக்குள் விஜய்யை கண்டிப்பாக இழுக்க வேண்டும் என்றும்,  வலுவான திமுக கூட்டணிக்கு எதிராக நாமும் வலுவாக இருந்தால் தான் வீழ்த்த முடியும் என்றும், மதுரை வந்த அமித்ஷா தனது கட்சியின் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
எனவே, விஜய்யை  கூட்டணிக்குள் இழுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது. பாஜகவின் வலையில் விஜய் வீழ்வாரா, அல்லது மாற்று நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!