Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’புற்று நோய்’ சிகிச்சைக்கான பணத்தை ’நிவாரண நிதி’க்கு வழங்கிய நடிகை : ரூ. 3 கோடிக்கு கார் வாங்கிய நடிகர்

Advertiesment
’புற்று நோய்’ சிகிச்சைக்கான பணத்தை ’நிவாரண நிதி’க்கு வழங்கிய நடிகை : ரூ. 3 கோடிக்கு கார் வாங்கிய நடிகர்
, திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (16:21 IST)
கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  அம்மாநிலத்தைச் சேர்ந்த பலர், தங்களால் இயன்ற அளவு நிதியை அளித்து உதவும் பொருட்டு, அம்மாநில முதல்வருக்கு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகை சரண்யா என்பவர் தனது புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த  பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இந்த  செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுதலையும் பெற்றுள்ளார்.
 
மேலும், பிரபல மலையாள நடிகர் பிரிதிவி ராஜ்,  சமீபத்தில் தான் புதிதாக வாங்கிய ரூ. 3 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காருக்கு விருப்ப எண்ணை ( 07 சி எஸ் 7777 ) பெறுவதற்கு  அங்குள்ள ஆர் டி ஓ அலுவலகத்தில் ஏலத்தில் பங்கேற்பதாக இருந்தது.
 
இந்நிலையில் பிரிதிவிராஜ்  அந்த ஏலத்தில் இருந்து விலகியுள்ளார்.  ஏலம் எடுக்கும் பணத்தை கேரள மக்களின் நிவாரண நிதிக்கு  கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரிதிவிராஜின் இந்த செயலையும் மக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்திய உலக புகைப்பட தினம்