Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவில் கட்டுக்கடங்காத மழை – நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த நபர் !

Advertiesment
கேரளாவில் கட்டுக்கடங்காத மழை – நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த நபர் !
, வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (11:03 IST)
கேரளாவில் கடந்த சில பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் தனது மூன்று குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளார் மலப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக தென் மேற்குப் பருவமழைக் கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான கேரளா வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.  மேலும் கனமழைக் காரணமாக மலைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலப்புரம் எனும் பகுதியைச் சேர்ந்த சரத் நிலச்சரிவுக்கு தனது குடும்பத்தில் 3 உறுப்பினர்களை இழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் தனது மனைவி கீது, மகன் துருவன் மற்றும் தாயார் ஆகியோரோடு ஒன்றாக உணவு கொண்டிருக்கிறார். அப்போது திடீரென அவர்கள் வீட்டுக்கு அருகே வெள்ளம் அதிகமாகியதால் மனைவி மற்றும் குழந்தையை பாதுகாப்பாக வீட்டினுள் இருக்க சொல்லிவிட்டு வெள்ளத்தின் பாதை மாற்ற சென்றுள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக கட்டுக்கடங்காத விதத்தில் வந்த வெள்ளத்தால் அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அவரது வீடு பெயர்த்துக் கொண்டு செல்ல அவரது மனைவி, மகன் மற்றும் தாயார் என அனைவரும் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். அவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அதை அடுத்து மீட்புப்பணிகளில் மூவரது உடல்களும் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செயின் பறிப்பு சம்பவத்தில் சிக்கிய பெண் – அதிர்ச்சியளிக்கும் பின்னணி !