Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்திய உலக புகைப்பட தினம்

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்திய உலக புகைப்பட தினம்
, திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (16:19 IST)
உலக புகைப்பட தினமான (ஆகஸ்டு 19) இன்றைய நாளில் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் புகைப்பட கண்காட்சியை நிகழ்த்தியுள்ளார்கள் இக்பால் முகமது லைஃப் அகாடமியினர்.

உலக புகைப்பட தினத்தை ஒட்டி தண்ணீரின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் வண்ணம் போட்டி, கண்காட்சி மற்றும் விற்பனையை திட்டமிட்டுள்ளனர் லைட் அண்ட் லைஃப் அகாடமியை சேர்ந்தவர்கள்.

இந்த போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்டோர் தங்கள் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர். அதில் 200க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். அதிலிருந்து 50 புகைப்படங்களை தேர்ந்தெடுத்து எக்ஸ்ப்ரஸ் அவென்யூவில் காண்காட்சிக்கு வைத்தார்கள்.

ஆகஸ்டு 16 முதல் 19 வரை நடைபெற்ற இந்த கண்காட்சியில் கடந்த 3 நாட்களில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு தண்ணீரின் அவசியம் குறித்து பார்வையாளர்களுக்கு விவரிக்கப்பட்டது.

குழந்தைகளுக்காக ஓவியம் வரையும் சிறுபோட்டி நடத்தப்பட்டது. மேலும் பார்வையாளர்களுக்கு கேமரா குறித்த விளக்கங்களையும் அளித்தனர்.
webdunia

இதுகுறித்து எல்.எல்.ஏ நிறுவனரும் புகைப்பட கலைஞருமான இக்பால் முகமது “இளைஞர்கள் இவ்வளவு பேர் இந்த போட்டியில் கலந்து க்ஒண்டது மகிழ்ச்சியளிக்கிறது. 2000க்கும் மேற்பட்ட புகைப்படங்களில் மிக கடினப்பட்டு 50 புகைப்படங்களை தேர்ந்தெடுத்தோம். எல்லா புகைப்படங்களும் அருமையாக இருந்தன. இதில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் புகைப்படத்தின் வலிமையை புரிந்து கொண்டிருப்பார்கள்” என கூறியுள்ளார்.
webdunia

சமூக அக்கறையுடன் கூடிய இந்த கண்காட்சியை எக்ஸ்ப்ரஸ் அவென்யூவின் 9வது வருட கொண்டாட்ட பொழுதில் நடத்தியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக எக்ஸ்பிரஸ் அவென்யூவின் சி.ஆர்.ஓ முனிஷ் கண்ணா கூறியுள்ளார்.

இந்த கண்காட்சியை பொதுமக்கள், புகைப்பட கலைஞர்கள், ஓவியர்கள் என 5000க்கும் மேற்பட்டோர் கண்டு களித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனது மனைவியை தடுக்க விமான பயணிகளை மிரளவைத்த நபர்.. அப்படி என்ன செய்தார்??