Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள, கர்நாடக வெள்ள நிவாரண நிதியாக சூர்யா-கார்த்தி கொடுத்த தொகை

கேரள, கர்நாடக வெள்ள நிவாரண நிதியாக சூர்யா-கார்த்தி கொடுத்த தொகை
, வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (15:58 IST)
சமீபத்தில் பெய்த கனமழையால் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். 
 
மேலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்த நிலையில் இயற்கை பேரிடர் ஏற்படும் போதெல்லாம் நிவாரண உதவியை முதல் நபராக அளிக்கும் நபர் நடிகர் சூர்யா என்பது தெரிந்ததே. அந்த வகையில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூபாய் 10 லட்ச ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர் 
 
இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சூர்யா தரப்பிலிருந்து அளிக்கப்பட்டது. கேரள மற்றும் கர்நாடக மாநில மக்களுக்கு சூர்யா நிதி உதவி அளித்ததை அடுத்து கோலிவுட் திரையுலகின் மற்ற நடிகர்களும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, கார்த்தி சகோதரர்களின் இந்த செயலை சமூக வலைதள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகி பாபு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகிறாரா? சுவாரஸ்யம் உச்சத்தை எட்டிவிடும்!