Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியைக் கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட கணவன் & மாமியார் !

Advertiesment
மனைவியைக் கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட கணவன் & மாமியார் !
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (11:23 IST)
கேரளா மாநிலம் தேக்கடியில் லாட்ஜில் கணவன், மனைவி மற்றும் மாமியார் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த பிரமோத் என்பவருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஜீவா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இருவருமே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர்கள். இந்நிலையில் கேரளாவின் தேக்கடிப் பகுதியில் நிலம் வாங்குவது தொடர்பாக பிரமோத், ஜீவா மற்றும் பிரமோத்தின் தாயார் ஷோபனா ஆகியோர் ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நிலம் வாங்குவது தொடர்பாக ஜீவாவுக்கும் பிரமோத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை முழுவதும் மூவருமே அறையில் இருந்து வெளியில் வராததால் சந்தேகப்பட்டு லாட்ஜ் ஊழியர்கள் அறைக்கதவை திறந்து பார்த்தபோது மனைவி கட்டிலில் சடலமாகவும், பிரமோத்தும் அவரது தாயாரும் தூக்கில் தொங்கியபடியும் சடலமாகக் கிடந்துள்ளனர்.

இதையடுத்து போலிஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சடலங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீவாவை இரண்டு பேரும் சேர்ந்து கொன்றுவிட்டு அதன் பின் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபாய ஆபத்தில் ஆர்க்டிக்? ரகசிய அணு ஏவுகணை சோதனை!