தமிழக வெற்றிக் கழகம் சார்பாக செயல் வீரர்கள் கூட்டம் இன்று சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல்குமார் போன்றவர்கள் கலந்து கொண்டனர். மேலும் 300-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா 2016ம் வருடம் ஜெயலலிதா தனித்து ஆட்சி அமைத்தது போல 2026-லும் விஜய் ஆட்சி அமைப்பார்.. அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து 24 கட்சிகள் நம்மை எதிர்க்கிறது. நாம் மக்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம்.
தேர்தல் ஆணையத்திலும் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்.. தேர்தல் ஆணையத்தில் உள்ள விஜயின் ரசிகர் ஒருவர்தான் விசில் சின்னத்தை நமக்கு ஒதுக்கி கையெழுத்து போட்டியிருக்கிறார்.
சிபிஐ அலுவலகம் சென்றால் அங்கும் விஜயுடன் செல்பி எடுக்க பலர் ஓடி வருகிறார்கள். டெல்லியிலும் அவர் ரீச் ஆகியிருக்கிறார்.
தலைவர் அன்பால் உருவாவதில்லை.. தியாகத்தால்தான் உருவாக்கப்படுகிறார்..விடுதலை சிறுத்தை கட்சியில் 20 பேர்தான் இருக்கிறார்கள்.. விடுதலை சிறுத்தை கட்சியை திமுக அடியாளாக பயன்படுத்தி வருகிறது.. இதை சொன்னால் என் மீது கோபப்படுவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெறும் என தெரிவித்திருக்கிறார்.