Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவெகவுக்கு வாங்கன்னு செங்கோட்டையன் கூப்பிட்டார்!.. ரகசியத்தை உடைத்த டிடிவி...

Advertiesment
ttv

Mahendran

, ஞாயிறு, 25 ஜனவரி 2026 (13:17 IST)
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்தவர் செங்கோட்டையன். எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா காலத்திலும் அதிமுகவில் பயணித்தார். 8 முறை கோபிசெட்டிபாளையத்தில் எம்எல்ஏவாக இருந்திருக்கிறார்.. சிலமுறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.. கொங்கு மண்டலமான கோபிசெட்டிபாளையத்தில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர் செங்கோட்டையன்.

அதிமுகவிலிருந்து டிடிவி தினகரன், சசிகலா, ஒபிஎஸ் ஆகியோரை எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கிய போது அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியதால் அவரை அதிமுகவிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.
இதையடுத்து தன்னை விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார் செங்கோட்டையன்.. மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்க செங்கோடையன் முயற்சி செய்தார். ஆனால் அது நடக்கவில்லை.

தற்போது டிடிவி தினகரன் அதிமுக-பாஜக கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய டிடிவி தினகரன் ‘அண்ணன் செங்கோட்டையன் தவெகவுடன் கூட்டணி அமைக்குமாறு தொடர்ந்து என்னிடம் பேசி வந்தார். ஆனால் நான் எந்த பதிலும் சொல்லவில்லை.. இப்போது நான் அதிமுக- பாஜக கூட்டணிக்கு வந்தபின் அவருக்கு போன் செய்தால் அவர் போனையே எடுப்பதில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாமக இருக்கும் அணியில் இருக்க மாட்டோம்: திருமாவளவன் உறுதி..!