Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாடல் ட்ரெஸ் போட மறுத்த மனைவிக்கு முத்தலாக்! – டெல்லியில் அதிர்ச்சி!

Advertiesment
National
, ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (17:54 IST)
நவீன பாணி ஆடைகளை அணிய மறுத்த மனைவியை கணவன் முத்தலாக் செய்துள்ள சம்பவம் டெல்லியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவை சேர்ந்த பாத்திமா என்பவருக்கும் இம்ரான் முஸ்தபாவிற்கும் 2015ல் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு தம்பதியர் டெல்லியில் செட்டிலாகி விட்டார்கள். இந்நிலையில் முஸ்தபா தனது மனைவி பாத்திமாவை குட்டை பாவாடை போன்ற நவீன மாடல் உடைகளை அணியும்படி வற்புறுத்தியிருக்கிறார். மேலும் மது அருந்தவும், க்ளப்களில் டான்ஸ் ஆடவும் வற்புறுத்தியிருக்கிறார்.

ஆனால் பாத்திமா இவற்றையெல்லாம் செய்ய மறுத்துள்ளார். அதனால் அடிக்கடி முஸ்தபா அடிக்கடி அவரை அடித்து கொடுமை செய்துள்ளார். அத்துடன் கொடுமை முடியவில்லை. இரண்டு முறை கர்ப்பமான பாத்திமாவை வற்புறுத்தி கருகலைப்பும் செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பாத்திமாவுக்கு முத்தலாக் கூறி வீட்டை விட்டு வெளியேற்றிருக்கிறார் முஸ்தபா. விவகாரத்து நோட்டீஸும் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பீகார் போலீஸில் புகார் அளித்துள்ளார் பாத்திமா. அதன்படி விசாரணைக்கு ஆஜராகும்படி முஸ்தபாவுக்கு பீகார் போலீஸிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சொந்த மனைவியையே கணவர் ஒருவர் கவர்ச்சியான ஆடைகளை அணிய சொல்லியும், மது அருந்த சொல்லியும் கொடுமைப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹெச் ராஜா vs பொன் ராதாகிருஷ்ணன் – தமிழக பாஜகவில் வலுக்கும் கோஷ்டி மோதல் !