Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரவிசங்கர் பிரசாத்: "3 படத்தில் ரூ.120 கோடி வசூல் ஆயிருக்கு; பொருளாதாரம் நல்லதான் இருக்கு"

ரவிசங்கர் பிரசாத்:
, சனி, 12 அக்டோபர் 2019 (21:26 IST)
"தேசிய விடுமுறை தினமான அக்டோபர் 2-ம்தேதி வெளியான மூன்று இந்தி திரைப்படங்கள் அன்றைய தினமே ரூ.120 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. எனவே, நாட்டின் பொருளாதாரம் நன்றாகத்தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார் இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
வார், ஜோக்கர், சாயிரா ஆகிய மூன்று படங்களைக் குறிப்பிட்டு இவைதான் இந்த சாதனையை படைத்துள்ளதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
 
#WATCH Union Minister Ravi Shankar Prasad in Mumbai: On 2nd October, 3 movies were released. Film trade analyst Komal Nahta told that the day saw earning of over Rs 120 crores, a record by 3 movies. Economy of country is sound, that is why there is a return of Rs 120 cr in a day.
 
மும்பையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது சினிமா வணிக பகுப்பாய்வாளர் கோமல் நத்தாவை மேற்கோள் காட்டி வசூல் சாதனை பற்றி தெரிவித்த அமைச்சர் இதனால், பொருளாதாரம் வலுவாகவே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
 
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொழில் துறை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டின. குறிப்பாக மோட்டார் வாகனத் துறையில் வளர்ச்சி விகிதம் சரிவை சந்தித்தது மட்டுமல்லாமல், வளர்ச்சி எதிர்மறையாகவே செல்லும் அளவு வீழ்ச்சி ஏற்பட்டு பல தொழிலகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், ரவிசங்கர் பிரசாத்தின் கருத்து சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. டிவிட்டரில் இந்த விமர்சனங்கள் டிரண்டை உருவாக்கி வருகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் ! ஐந்தில் ஒரு குழந்தை பலி !