Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை!? – மத்திய அமைச்சர் தகவல்

Advertiesment
National News
, ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (12:15 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் அதிகம் உள்ளதாக உத்தர பிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி பொதுமக்களும் பல இடங்களில் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு அவரது உருவ பொம்மையை எதிர்த்து சிலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் குறித்து பேசிய மத்திய ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஆய்வறிக்கை வழங்குமாறு ஒளிபரப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆய்வறிக்கை சமர்பித்த பிறகு பிக்பாஸ் தடை செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இந்தி பிக்பாஸ் மட்டும்தான் தடை செய்யப்படுமா அல்லது அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளும் தடை செய்யப்படுமா என்பது குறித்து அதில் குறிப்பிடவில்லை. என்றாலும் மற்ற மொழிகளிலும் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு எதிராக புகார் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிகாந்த் மீண்டும் இமயமலை பயணம்!