Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழை பெய்தால் 18 சதவீதம் GST வரி?! பில் போட்ட Food Delivery நிறுவனங்கள்! - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Advertiesment
Delivery apps

Prasanth K

, புதன், 24 செப்டம்பர் 2025 (12:47 IST)

சமீபத்தில் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் உணவு டெலிவரி நிறுவனங்கள் மழையில் டெலிவரி செய்வதற்கு ஜிஎஸ்டி போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரிகள் 90 சதவீதம் பொருட்களுக்கு குறைக்கப்பட்டு 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுக்குகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

 

பொதுவாக இந்த டெலிவரி நிறுவனங்கள் அதிமழை பெய்யும் சமயங்களில் உணவு டெலிவரி செய்வதற்கு Rain Fee என கூடுதலாக ஒரு தொகையை வசூலிக்கின்றன. இந்நிலையில் அந்நபர் ஆர்டர் செய்த உணவுக்கு 25 ரூபாய் மழை கட்டணமாக விதித்தது மட்டுமல்லாமல் அந்த கூடுதல் கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி போடப்பட்டு கூடுதலாக மேலும் ரூ.4.50 சேர்க்கப்பட்டு ரூ.29.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

 

இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர் “வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்குப் பிறகு, கடவுள் இந்திரனும் கூட வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளார்.

 

இப்போது மழை பெய்யும்போது, ​​உங்களுக்கு ₹25 மழை கட்டணம் + 18% ஜிஎஸ்டி = ₹29.50 கிடைக்கும்

 

அடுத்து சூரிய ஒளி வசதி கட்டணம், ஆக்ஸிஜன் பராமரிப்பு கட்டணம். சுவாசிக்கும் போது அதற்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதிருக்கும்” என கிண்டலாக கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20 ஆண்டுகளாக விலை ஏறாமல் இருந்த பார்லேஜி பிஸ்கெட்.. ஜிஎஸ்டியால் விலை குறைந்தது..!