Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்கள் உதவி திட்டத்தில் பணம் பெற்ற 14000 ஆண்கள்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
Maharashtra

Prasanth K

, திங்கள், 28 ஜூலை 2025 (11:24 IST)

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு உதவித்தொகை அளிப்பதற்கான திட்டத்தில் போலியாக விண்ணப்பித்து ஆண்கள் பணம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பெண்களுக்கு மாத உதவித்தொகை வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறாக மகாராஷ்டிராவிலும் ‘லக்கி பெஹன்’ என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 26.34 லட்சம் பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் அதில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

விசாரணையில் இந்த திட்டத்தில் 14 ஆயிரம் ஆண்கள் முறைகேடாக விண்ணப்பித்து மாதம் ரூ1500 உதவித்தொகை பெற்று வந்தது அம்பலமாகியுள்ளது. அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் வழங்கப்பட்ட தொகையை திரும்ப வசூல் செய்யவும், விண்ணப்பங்களை முறையாக சரிபார்க்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

மேலும் எத்தனை பேர் இந்த திட்டத்தில் முறைகேடு செய்துள்ளனர் என்பதை கண்டறிவதற்காக இந்த லக்கி பெஹன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளத்தில் மீட்கப்பட்ட யாரும் குழந்தையை தத்தெடுத்தது மாநில அரசு.. அதிரடி அறிவிப்பு..!