கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் குறைந்து பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உயர்ந்த தங்கம் விலை, நேற்று சற்றே சரிந்திருந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.
சென்னையில், இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்துள்ளது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே தங்கம் விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தங்கம் மட்டுமல்லாமல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,000 குறைந்துள்ளதால், வெள்ளி வாங்குபவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய தங்கம் ,வெள்ளி விலை குறித்த நிலவரம் இதோ:
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,270
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,220
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 82,160
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,760
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,203
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,149
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 89,624
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 89,192
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 141.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 141,000. 00