Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காசா நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறுங்கள்:புதிய பாதையை திறந்த இஸ்ரேல்..!

Advertiesment
தரைவழித் தாக்குதல்

Mahendran

, வியாழன், 18 செப்டம்பர் 2025 (10:57 IST)
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அப்பாவி பொதுமக்கள் நகரத்தை விட்டு வெளியேற உதவும் வகையில் தற்காலிகமாக புதிய போக்குவரத்து பாதை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
 
2023-ஆம் ஆண்டில் காசாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக, ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் அறிவித்தது. 
 
இந்த நிலையில் தற்போது இஸ்ரேலின் தாக்குதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. நகரிலிருந்து வெளியேற முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், முன்னர் அனுமதிக்கப்பட்ட அல்-ரஷீத் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டன.
 
இதனை கருத்தில் கொண்டு, சலா அல்-தின் சாலை வழியாக பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த வழித்தடம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மட்டுமே திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இஸ்ரேலின் இந்த கடுமையான தாக்குதல் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக கண்டித்துள்ளன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதைப்பொருள் கடத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா.. டிரம்ப் கூறிய அதிர்ச்சி தகவல்..!