கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் தங்கம் பத்தாயிரம் ரூபாயை தாண்டி விற்பனையாகி வந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்து முதல் முறையாக ஒரு சவரன் ரூ.82,000-ஐ தாண்டியுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு சில மாதங்களில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயைத் தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்துள்ளது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, சாதாரண மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்குவதை மேலும் கடினமாக்கியுள்ளது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,210
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,280
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,680
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 82,240
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,138
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,214
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 89,104
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 89,712
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 144.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 144,000. 00