தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயில்வதற்காக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் 1ம் வகுப்பு வரை 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் மாணவர்கள் படிக்கின்றனர். இதற்கான கல்வி நிதியை மத்திய அரசு வழங்கி வந்த நிலையில் சமீபத்தில் நிதி நிறுத்தப்பட்டது.
இந்த சிக்கலால் இந்த கல்வி ஆண்டில் இலவச கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது மத்திய அரசு இதற்கான நிதியை விடுவித்துள்ள நிலையில், தற்போது ஏற்கனவே பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களில் 25 சதவீதம் பேருக்கு இலவச கல்வி வழங்க வேண்டுமென்றும், அவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை திரும்ப அளிக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது அட்மிஷன் முடிந்து காலாண்டு தேர்வு வரை முடிந்துவிட்ட நிலையில் கல்வி கட்டணத்தை திரும்ப அளிப்பதால் தனியார் பள்ளிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என தனியார் பள்ளி நிறுவனர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K