Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

500 கோடி வசூலை குவித்த படத்தின் கதையை எழுதியது சாட்ஜிபிடியா? - ஆச்சர்ய தகவல்!

Advertiesment
Saiyaara chatgpt climax

Prasanth K

, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (16:10 IST)

சமீபமாக திரைத்துறையில் ஏஐயின் தலையீடு அதிகரித்து வரும் நிலையில், இந்தியில் வெளியாகி வசூலை குவித்த படத்தின் கதையில் சில மாற்றங்கள் ஏஐ மூலமாக செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தனுஷூக்கு இந்தி சினிமாவில் மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுத்த படமான அம்பிகாபதி (ராஞ்சனா) சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் அதில் க்ளைமேக்ஸை ஏஐ பயன்படுத்தி அவர்கள் மாற்றியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதற்கு தனுஷும் கண்டனம் தெரிவித்தார்.

 

இந்நிலையில் பாடல்கள், சினிமா காட்சியமைப்புகள் என பலவற்றிலும் ஏஐயின் தாக்கம் மற்றும் பங்களிப்பு அதிகரித்து வருவதை காண முடிகிறது. ரஜினிகாந்த் நடித்து வெளியாகவுள்ள கூலி திரைப்படத்தின் பாடலில் சில வரிகளை ஏஐயிடம் கேட்டுப் பெற்றதாக அனிருத் கூறியிருந்தார்.

 

இந்தியில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி வசூல் மழையை குவித்து வரும் படம் சய்யாரா. தற்போது இந்த படம் ரூ.500 கோடி பாக்ஸ் ஆபீஸை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய அதன் கதை எழுத்தாளர் சங்கல்ப் சாதனா, “வித்தியாசமான க்ளைமேக்ஸ் அமைக்க விரும்பி அதுகுறித்து சாட்ஜிபிடி உதவியை நாடினோம். அது கொடுத்தவற்றில் ஒன்றை எடுத்து எங்களுக்கு தேவையான சில மாற்றங்களை செய்து க்ளைமேக்ஸ் அமைத்தோம்” என கூறியுள்ளார்.

 

இந்த தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் எதிர்காலத்தில் சினிமா கதை எழுதும் வேலை போன்றவற்றை ஏஐ பறித்துக் கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!