ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் செல்கிறார்கள் பல மணி நேரங்கள் காத்திருந்து சாமி தரிசனத்தை பெறுகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து அதிகப்படியான பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்கள், சில நேரங்கள் இரண்டு நாட்கள் கூட காத்திருந்து அவர்கள் சாமியை தரிசிக்கிறார்கள்.
திருப்பதி கோவிலில் பல வருடங்களாகவே அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த நேரம் சென்றாலும் அங்கு பக்தர்களுக்கு இலவச உணவு பரிமாறப்படுகிறது.. தற்போது திருப்பதி தேவஸ்தான அன்னபிரசாத திட்டம் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. அதன்மூலம்ம்,
இப்போது ஏறக்குறைய 3 லட்சம் பேருக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது.. சமையல் அறைகள் இரவு பகலாக இயங்கி வருகின்றன.
காலை கோதுமை ரவை உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, பொங்கல் சட்னி சாம்பார் ஆகியவை வழங்கப்படுகிறது. மதியம் சக்கரை பொங்கல், சாதம், காய்கறிகள், வடை, சாம்பார், ரசம், மோர் ஆகிய 8 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. மாலையில் மீண்டும் சர்க்கரை பொங்கல், சாதம், காய்கறி, ரசம், மோர் போன்ற உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. மேலும், அதிக பக்தர்கள் வரும் முக்கிய நாட்களில் மோர், பாதாம் பால், பிஸ்கட் மற்றும் ஜூஸ் பக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன.