Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்!.. நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்!...

Advertiesment
bangaladesh

BALA

, சனி, 20 டிசம்பர் 2025 (19:46 IST)
வங்க தேசத்தில் போன வருடமே வரலாறு காணாத போராட்டமும், கலவரமும் நடைபெற்றது. வன்முறையை கட்டுக்கடங்காமல் போனதால் அதிபர் ஷேக் ஹசீனா சீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஷெரீப் உஸ்மான் ஹாடி என்பவர்தான் இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தினார். இந்நிலையில்தான் கடந்த 12ம் தேதி அவர் மீது சிலர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

அதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 18ம் தேதி மரணமடைந்தார். அவரின் இறுதி ஊர்வலம் இன்று நடந்தபோது மீண்டும் கலவரம் வெடித்தது. வங்கதேசத்தில் மாணவர்களும், இளைஞர்களும் மீண்டும் போராட்டத்தில் குதித்தார்கள். ஒரு கட்டத்தில் அது வன்முறையாக மாறியது.

இதையடுத்து பத்திரிக்கை அலுவலகங்கள் மற்றும் முன்னாள் பிரதமர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை இளைஞர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். மேலும், இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது இந்தியாவை சேர்ந்த ஒரு வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். போராட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக கோசங்களும் எழுப்பினார்கள்.

மேலும், போராட்டக்காரர்கள் தடையை மீறி வங்கதேசம் நாடாளுமன்றத்திற்கு நுழைய முயற்சி செய்தனர். எனவே, அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் எச்சரிக்கையை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றனர். வங்க தேசத்தில் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் நாடெங்கும் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேட்டியில் தொகுப்பாளருடன் கட்டிப்பிடி சண்டை போட்ட ராம்தேவ்!.. வீடியோவால் பரபரப்பு!...