Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெனிசுலாவின் செயல் அதிபர் நான்தான்.. அமெரிக்க அதிபர் டிரம்ப்..!

Advertiesment
டொனால்ட் டிரம்ப்

Siva

, திங்கள், 12 ஜனவரி 2026 (13:55 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிரடிப் பதிவு சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 
 
"வெனிசுலாவின் செயல் அதிபர் நான்தான்" என்று அவர் பதிவிட்டுள்ளது உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது. வெனிசுலாவில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வரும் சூழலில், டிரம்பின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
 
வெனிசுலாவின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், அங்குக் நிலவும் பொருளாதாரச் சீர்குலைவைச் சரிசெய்யவும் அமெரிக்கா நேரடியாகத் தலையிடும் என்பதையே டிரம்பின் இந்தப் பதிவு உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 
 
இருப்பினும், ஒரு நாட்டின் அதிபர் மற்றொரு நாட்டின் "செயல் அதிபர்" என்று தன்னை அறிவித்துக் கொள்வது சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. டிரம்பின் இந்தத் திடீர் அறிவிப்பால் வெனிசுலா அரசு கடும் கோபமடைந்துள்ள நிலையில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிவிகே.. டிவிகே.. டிவிகே.. டெல்லி சிபிஐ அலுவலகத்தின் வெளியே தொண்டர்கள் கோஷம்..!