கோவாவில் நடைபெற்ற சவால் நிறைந்த விளையாட்டு போட்டி ஒன்றில் பங்கேற்று, நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக நிறைவு செய்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது 'எக்ஸ்' தளத்தில் விடுத்துள்ள செய்தியில், "அன்புச் சகோதரர்கள் கே. அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா ஆகியோருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள், 1.9 கி.மீ. கடல் நீச்சல், 90 கி.மீ. சைக்கிள் பந்தயம், மற்றும் 21 கி.மீ. மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஆகிய கடினமான பிரிவுகளை வெற்றிகரமாக கடந்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு உணர்வை ஊக்குவித்ததற்காக அவர் அவர்களை பாராட்டினார்.