மூலநோய் என்பது மிகவும் கொடூரமான ஒரு நோயாக கருதப்படும் நிலையில் இந்த நோய் குணமாக என்னென்ன உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் முன்னோர்கள் கூறியது தற்போது பார்ப்போம்.
1. துத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம்.
2. கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.
3. பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.
4. முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
5. கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். * உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
*6. தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும்.
7. வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்.
8. கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
9. இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
10. நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம் மற்றும் வாழைப்பழம் உண்ண வேண்டும்.*