Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாட்டிலில் எத்தனை நாட்கள் குடிநீரை சேமித்து வைக்கலாம்?

Advertiesment
குடிநீர்
குடிநீர் தற்போது பெரும்பாலும் பாட்டிலில் தான் அடைத்து வைத்து விற்கப்படும் நிலையில், இந்த பாட்டில் தண்ணீரை எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம் என்பது குறித்து சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்.

பொதுவாக, நம்முடைய இடத்தின் வெப்ப சூழ்நிலையில், ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே பாட்டிலில் குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். மிகவும் நீண்ட காலத்திற்கு சேமித்து வைப்பது சுகாதாரத்துக்கு கெடுதியாகும். ஏனெனில், பாட்டிலை ஒருமுறை திறந்து விட்டால், காற்றில் உள்ள கார்பன் டைஆக்சைடை அது இழுத்துக் கொள்ளும். அதனால் சுவை மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.

பாட்டிலை திறந்து விட்டால், ஓரிரு நாட்களுக்குள் குடித்து முடித்து விடுவது நல்லது. மேலும், குடிநீர் பாட்டில்களில் வெயில் பட்டால் பாக்டீரியா வளர வாய்ப்புள்ளது. எனவே, தினமும் குடிநீரை காலி செய்துவிட்டு, நன்றாக சுத்தம் செய்து, அதன்பின் மீண்டும் குடிநீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும்.

சூரிய ஒளி நேராக குடிநீர் பாட்டில் மீது பட்டால், அல்லது அதிக வெப்பம் இருக்கும் இடத்தில் இருந்தால், நுண்ணுயிர் கிருமிகள் தண்ணீரில் வளரும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை அதிக நாட்களுக்கு குடிநீரை சேமித்து வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தால், நன்றாக மூடப்பட்ட சீல் வைக்கப்பட்ட பெரிய பாத்திரங்களில் சேமித்து வைக்க வேண்டும். மேலும், அந்த பாத்திரங்கள் குளிர்ந்த, இருட்டான பகுதியில் தான் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான பலன்கள்..!