நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய உடனேயே மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதே இதற்கு காரணம்.
இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகம், கேரளம், பிகார் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அவசர கதியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்கொள்வதன் மூலம், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான வாக்காளர்களை நீக்குவதற்கு மத்திய அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மக்களவையில் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை அவைத்தலைவர் ஏற்க மறுத்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியை தொடர்ந்து, அவைத் தலைவர் ஓம் பிர்லா மக்களவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.