உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில், குளிர்காலம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து, பக்தர்களுக்கான தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணை அக்டோபர் 23ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தரிசன நேரம் தொடக்கம்: பக்தர்கள் காலை 6.20 மணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். (முன்பு காலை 6.00 மணி)
தரிசனம் நேரம் நிறைவு: இரவு 8.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்யலாம். (முன்பு இரவு 9.00 மணி வரை)
நடை சாத்தப்படும் நேரம்: மதியம் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோயில் நடை மூடப்பட்டிருக்கும். அதன் பின்னர் மீண்டும் தரிசனத்திற்காக திறக்கப்படும்.
ஆரத்தி நேரம் மாற்றம்:
தரிசன நேரத்தை போலவே, மூன்று முக்கிய ஆரத்திகளின் நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன:
மங்கள ஆரத்தி: அதிகாலை 4:30 மணி.
சிருங்கர் ஆரத்தி: காலை 6:30 மணி.
சயன ஆரத்தி: இரவு 9:30 மணி.