18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. வழக்கமான அந்த அணியில் தனி வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் கடந்த சீசனில் ரஜத் படிதார் எனும் இளைஞர் கேப்டனாக நியமிக்கப்பட்டு, பல மேட்ச் வின்னிங் இளம் வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அதுவே வெற்றிக்குக் காரணம் என்று சொல்லலாம்.
கடந்த சீசனில் அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஒன்பது வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றார்கள். இந்நிலையில் அடுத்த சீசனுக்கு அந்த அணித் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் மினி ஏலத்துக்கு முன்பாக சில வீரர்களைக் கழட்டிவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த பட்டியலில் மயங்க் அகர்வால், லியாம் லிவிங்ஸ்டன், முசரபானி, ரசிக் தர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.