ஐபிஎல் தொடரில் அதிக முறைக் கோப்பைகளை வென்ற அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இதனால் அந்த அணி தமிழ்நாட்டைத் தாண்டியும் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது. மற்ற அணிகளோடு, அவர்களின் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே விளையாடும்போது கூட மஞ்சள் ஜெர்ஸிக்களால் மைதானம் நிரம்பியிருக்கும்.
ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக அந்த அணியால் ப்ளே ஆஃப் கூட செல்லமுடியவில்லை. தோனி விரைவில் ஓய்வு பெறப் போகிறார் என்ற சூழலில் அந்த அணிக்கு ஒரு திடமானக் கேப்டன் தேவை. ருத்துராஜால் அதை சரிவர செய்ய முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு அந்த அணி சஞ்சு சாம்சனை ஜடேஜாவைக் கொடுத்து டிரேட் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மினி ஏலத்துக்கு முன்பாக “டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் மற்றும் ஜேமி ஓவர்டன்” ஆகியோரை விடுவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.