Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்திருக்கவேண்டும்… துக்கமான நாளாகிவிட்டது- கோலி வருத்தம்!

Advertiesment
IPL 2025

vinoth

, புதன், 3 செப்டம்பர் 2025 (10:37 IST)
18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது சம்மந்தமாக ஆர் சி பி நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்ததற்குப் பிறகு 3 மாதங்களாக எந்த பதிவையும் பகிராத RCB அணி “RCb cares’ என்ற அமைப்பின் மூலம் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 25 லட்ச ரூபாய் நிதியளித்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி பேசியுள்ள விராட் கோலி “ஆர் சி பி வரலாற்றில் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்திருக்க வேண்டிய நாள் துக்கமான நாளாகிவிட்டது. நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிராத்தனை செய்துகொண்டிருக்கிறேன். அவர்களின் இழப்பு எங்கள் கதையில் ஒரு அங்கமாகிவிட்டது. அன்பு, அக்கறை மற்றும் மரியாதையுடன் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வோம்.” என பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஸ்ட்லியான கால்பந்து வீரர்கள்..! வீரர்களை வாங்க ₹35,000 கோடி செலவு செய்த அணி உரிமையாளர்கள்..!