இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து பேட் செய்ய வந்த இந்திய அணி அடுத்தடுத்து பேட்ஸ்மேன்களை இழந்தது. அதன் காரணமாக முதல் நாள் முடிவில் 204 ரன்கள் மட்டுமே சேர்த்து 6 விக்கெட்களை இழந்தது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் கருண் நாயர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் இந்திய அணிக் கேப்டன் ஷுப்மன் கில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த இந்தியக் கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் அவர் 737 ரன்கள் சேர்த்துள்ளார். இதற்கு முன்பாக 1979 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.